தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பில் ‘நியூஸ் ஒப்தி வேல்ட்’ பத்திரிகையின் முன்னாள் செய்தி முகாமையாளர் ஸ்டுவட் குட் னர் ஸ்கொட்லான்ட் யார்ட் பொலி ஸாரால் கைது செய்யப்பட்டு விசார ணைக்கு பின் பிணையில் விடுவிக்கப் பட்டார்.
இதன்படி தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்துடன் தொடர்புபட்டு கைதான 11 ஆவது நபராக குட்னர் பதிவானார். நேற்று முன்தினம் காலை கைதான 71 வயதான குட்னர் நீண்ட நேர விசாரணைக்கு பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஸ்டுவட் குட்னர் ஒட்டுக்கேட்பு சர்ச்சையால் மூடப்பட்ட ‘நியூஸ் ஒப்தி வேல்ட்’ பத்திரிகையில் 22 ஆண்டுகள் செய்தி முகாமையாளராக பணியாற்றி கடந்த 2009 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
