வியாழன், 4 ஆகஸ்ட், 2011

அமெரிக்கா உலக பொருளாதாரத்தின் புல்லுருவி - ரஷ்ய பிரதமர் கண்டனம்

கடுமையான பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா உள்ளது. இதனால், கடன் உச்ச வரம்பை அதிகரிக்கும் முயற்சியில் ஒபாமா ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவின் பாதிப்பு உலகம் முழுவதும் எதிரொலிப்பதற்கு ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேட்டியளித்த புடின், “அமெரிக்கா தன்னுடைய உண்மையான தகுதிக்கு அப்பாற்பட்டு வாழ்கிறது. அவர்களுடைய பிரச்சினைகளின் சுமையை உலக பொருளாதாரத்தில் சுமத்துகின்றனர். சர்வதேச அளவில் அவர்களுடைய டொலர் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதால், சர்வதேச பொருளாதாரத்தை சீர் குலைக்கும் புல்லுருவிகள் போல அவர்கள் உள்ளனர்” என்றார்.