வியாழன், 4 ஆகஸ்ட், 2011

கராச்சி வன்முறைக்கு ஒரே நாளில் 34 பேர் பலி

பாகிஸ்தானில் கராச்சி நகரில் அரசுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக கலவரம் வெடித்துள்ளது. பல்வேறு இடங்களிலும் அடையாளம் தெரியாத மர்ம மனிதர்கள் புகுந்து துப்பாக்கியால் சுடுகின்றனர். ஓராஞ்சி, சுரஞ்சனி நகரம், பாக் காலனி, லந்தி, கோரஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. நேற்று முன்தினம் மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் வன்முறைக்கு 34 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை மட்டும் மொத்தம் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு மாதங்களில் நூற்றுக் கணக்கானோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, எம். கியு. எம். கட்சி தலைவர் உசைன், வன்முறையை அடக்க அரசுக்கு 48 மணி நேர கெடு விதித்துள்ளார்.