யாழ்.இளவாலைப் பகுதியிலுள்ள பாலடைந்த கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளவாலை கிழக்கைச் சேர்ந்த மயில்வாகனம் தர்ஷினி வயது 26 என்பவரது சடலம் என உறவினர்களினால் இனம் காணப்பட்டுள்ளது.
இவரின் கழுத்துப்பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கிய காயம் காணப்படுகிறது. இவரது மரணம் தொடர்பாக இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவரது சடலம் தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
