ஊடகவியலாளர் தாக்கப்படுவது குறித்து தன்னால் ஏதும் செய்யமுடியாது என அமைச்சரவை பேச்சாளர் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும், வேண்டுமானால் தாக்கப்பட்டவர்களை இளநீர் ஒன்றுடன் சென்று வைத்தியசாலையில் பார்வையிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தன்னால் இதுகுறித்து பொலிஸாருக்கு எந்த பணிப்புரையும் வழங்கமுடியாது எனவும் தான் பாதுகாப்பு அமைச்சர் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, இவ்வாறான வழக்குகளுக்கு எதிராக மக்கள் சாட்சி சொல்ல முன்வருவதில்லை எனவும், அவ்வாறு அவர்கள் சாட்சிகூற முன்வரமால் வழக்கினை தொடர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
