வியாழன், 4 ஆகஸ்ட், 2011

க.பொ.த உ/த பரீட்சைக்கு தேசிய அடையாள அட்டை அவசியம்

க.பொ.த உ/த பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களிடம் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் அவர்களுக்காக ஆட்பதிவுத் திணைக்களத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட பிரிவின் கீழ் உடனடியாக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் விஜயவீர தெரிவித்துள்ளார்.

இம்மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உ/த பரீட்சைக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உ/த பரீட்சை எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இதேவேளை, தேசிய அடையாள அட்டை கட்டாயமானது எனவும் அதனை காட்டி அடையாளத்தை உறுதிப்படுத்தாத போது அவர்களது பரீட்சை பெறுபேறுகள் வெளியாகாது எனவும் பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய அடையாள அட்டை தொடர்பில் ஏதாவது சந்தேகங்கள் ஏற்படின் 011-2-585043 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது 011-2-583122 என்ற தொலைநகல் இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளலாம் என அரச தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.