யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிகள் அனைத்தும் காப்பெற் வீதிகளாக்கும் பணிகள் முற்றாக நிறைவடைந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் லி.சுதாகர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத் திட்டம் 6 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு காப்பெற் வீதிகளாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
யாழ்.மாநகரசபைக்கு உட்பட்ட வீதி அதிகார சபைக்குச் சொந்தமான 18 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் காப்பெற் வீதிகளாக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக 201 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் தெரிவித்தார்.
மேலும் யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகள், வீதி அகலமாக்கும் போது காப்பெற்றாக மாற்றப்படும் என்றும் லி.சுதாகர் கூறினார்.
