மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர்கள் சிலர் இன்று காலை ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
உயர்தரத்தில் கலை மற்றும் வர்த்தகப் பிரிவில் சித்தியடையும் மாணவர்களை தாதியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்பாட்டம் காரணமாக இன்று காலை வைத்தியசாலையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் மாகாணத்தில் உள்ள அனைத்து தாதியர்களையும் இணைத்துக் கொண்டு பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் அறிவித்துள்ளனர்.
