490 மில்லியன் டொலர் பெறுமதியான 1.2 தொன் தொகைகள் போதைப் பொருளை பிரிட்டன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இங்கிலாந்தின் தென் கிழக்கு துறை முகத்தில் இருந்து கரீபியன் தீவுகளுக்கு பயணிக்கும் ஆடம்பர படகு ஒன்றிலிருந்தே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட் டுள்ளது. இதன்படி பிரிட்டனில் கைப்பற்றப்பட்ட மிகப் பெரிய போதைப் பொருள் இதுவென பிரிட்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையவர் நெதர்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
