வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

சீமெந்து பதுக்கல்: வர்த்தகர்கள் பாதுகாப்பு அதிகார சபை கைது

சீமெந்தைப் பதுக்கி வைத்துக்கொண்டு சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாகக் காட்ட முயன்ற வர்த்தகர்கள் பலரை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை கைது செய்துள் ளது.

அத்துடன் அவ்வாறு பதுக்கி வைத்திருந்த 50 கிலோ கிராம் நிறைகொண்ட 500 சீமெந்துப் பொதிகளையும் அவர்களிடமிருந்து மீட்டுக் கொண்டுள்ளதுடன் இதில் பத்து வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகார சபை தெரிவித்தது.

மஹரகம மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று மேற்படி அதிகார சபையின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போதே சீமெந்து மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சீமெந்தைப் பதுக்கி வைத்தல், அதனை அதிக விலைக்கு விற்றல், நிபந்தனைகளுடன் அதனை நுகர்வோருக்கு வழங்குதல் போன்ற வர்த்தகர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனமெடுத்துள்ள மேற்படி அதிகார சபை நாட்டின் சகல பகுதிகளிலும் விசேட சுற்றிவளைப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பணிப்புரைக்கமைய கொழும்பு, கம்பஹா, கண்டி, குருநாகல், கேகாலை, நுவரெலியா, மாத்தளை, அநுராதபுரம் போன்ற மாவட்டங்களில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.