சனி, 6 ஆகஸ்ட், 2011

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம்: இலங்கை திட்டம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள இலங்கை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணுசக்தி மற்றும் அணுகதிர் வீச்சு பொருட்களின் பயன்படுத்தும் திறனை மேம்படுத்தும் வகையில், அதற்கான உதவியை அமெரிக்காவிடம் இருந்து பெற, அந்நாட்டுடன் இலங்கை அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது.

இது தொடர்பாக, அமெரிக்காவுடன் பேச குழு ஒன்றை அமைக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இக்குழு அமெரிக்கா உதவியுடன் அணுசக்தி மற்றும் அணுகதிர்வீச்சு பொருட்களை கையாளும் திறனை மேம்படுத்துவது குறித்து திட்டம் ஒன்றை தயாரிக்கவுள்ளது.