திங்கள், 19 செப்டம்பர், 2011

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நியூயோர்க் சென்றார் - 23ம் திகதி விசேட உரை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை நியூயோர்க் சென்றதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக ஜனாதிபதி நியூயோர்க் நோக்கி பயணமானார்.

ஐ.நா. சபையின் 66 வது அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஏற்கனவே நியூயோர்க் சென்றடைந்துள்ளார்.

இந்த நிலையில் நியூயோர்க் செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் செப்டெம்பர் 23ம் திகதி ஐ.நா சபையில் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா நிபுணர் குழு வெளியிட்ட இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான அறிக்கை ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி தனது உரையில் அதிருப்தி வெளியிடவுள்ளதாக அறியக்கிடைக்கிறது.