பொதுநலவாய தொலைத் தொடர்பாடல்கள் அமைப்பின் தலைமைத்துவ நாடாக மீண்டும் இலங்கை ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ரினிடாட் டொபாகோவில் கடந்த 15ம் 16ம் திகதிகளில் இடம்பெற்ற குறித்த அமைப்பின் 51ஆவது கூட்டத் தொடரிலேயே இலங்கை தலைமைத்துவ நாடாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 50வது கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் ஜனாதிபதியின் செயலாளரும் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவருமான லலித் வீரத்துங்க கலந்து கொண்டார். அப்போதும் இலங்கை தலைமைத்துவ நாடாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை குறித்த கூட்டதொடருக்கு லலித் வீரத்துங்கவினால் செல்லமுடியாததையிட்டு அவர் சார்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
