திங்கள், 9 ஜனவரி, 2012

பண்டிகைக் காலங்களில் நுகர்வோர் அதிகார சபைக்கு 9 மில்லியன் இலாபம்

கடந்த பண்டிகைக் காலங்களின் நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பெறப்பட்ட தண்டப்பணம் மூலமாக நுகர்வோர் அதிகார சபைக்கு 9 மில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது.

இத் தொகையானது கடந்த டிசம்பர் மாத காலப்பகுதி வரை அறவிடப்பட்ட தண்டப்பணம் மூலமாக பெறப்பட்டுள்ளது.

இத் தொகையானது 4120 தேடுதல் சம்பவங்களில் மூலாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ருமி மர்சூக் தெரிவித்துள்ளார்.

அதிகார சபையின் சோதனை நடவடிக்கைகளின் போது வியாபார நிலையங்களிற்கு விநியோகிப்பதற்காக தயார் நிலையில் இருந்த, பாவனைக்கு உதவாத உருளைக் கிழங்கு, பருப்பு, நெத்தலி, சிறிய வெங்காயம் மற்றும் பெருந் தொகையான பெரிய வெங்காயம் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக ருமி மர்சூக் தெரிவித்தார்.