ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரக போராட்டம் இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக உபவேந்தர் பதவிவிலக வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ பீட மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்றைய தினம் பல்கலைக்கழகத்திற்கு முன்னிலையில் ஒன்று கூடி கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மேலும் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் காலவரையரையின்றி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
