ஞாயிறு, 8 ஜனவரி, 2012

மட்டக்களப்பு சந்திவெளியில் கடை உரிமையாளரின் சடலம் கருகிய நிலையில் மீட்பு

மட்டக்களப்பு சந்திவெளியில் கருகிய நிலையில் சில்லறைக்கடை உரிமையாளர் ஒருவரின் சடலம் ஏறாவூர் பொலிஸாரினால் நேற்று சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.

சந்திவெளியைச் சேர்ந்த ஜயாத்துரை யோகன் (வயது 42) என்பரது சடலமே கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவதினத்தன்று பூட்டியவாறு காணப்பட்ட கடையின் உட்பகுதியிலிருந்து தீச்சுவாலை வெளிவந்தமையையடுத்து பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், சடலத்தை மீட்டு செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.