திங்கள், 9 ஜனவரி, 2012

முல்லைத்தீவு தேர்தல் தொடர்பில் கட்சி செயலாளர்களுடன் கலந்தரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒத்தி வைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் தொகுதிகளில் தேர்தல்களை நடாத்துவது தொடர்பில் தேர்தல் செயலகம் கவனம் செலுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு பிரதேச சபைகளுக்குமான தேர்தல்களை எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி நடத்துவது தொடர்பில் கட்சி செயலாளர்களுடன் கலந்தாலோசிக்க திர்மானித்துள்ளதாகவும் தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

இத்தேர்தல் தொகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படாமையின் காரணமாக மக்கள் மீள்குடியேறவில்லை. இதனால் இங்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டன.