உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான எயார்பஸ்- A380 முதற்தடவையாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் அதிகாலை 4.20 மணியளவில் அவுஸ்திரேலியா சிட்னி நகரில் இருந்து எரிபொருள் நிரப்புவதற்காக வந்து, பின்னர் 5.40 மணியளவில் மீண்டும் டுபாய் நகரை நோக்கி பயணித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பான இந்த விமானத்தில் சுமார் ஆயிரம் பயணிகள் பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
