சனி, 4 பிப்ரவரி, 2012

யாழ்-ஒமந்தை புகையிரதப் பாதையில் 63 கிலோ மீற்றர் தூரத்திற்கு மிதிவெடி இல்லை

ஒமந்தை முதல் யாழ்ப்பாணம் வரையான புகையிரதப்பாதையில் 63 கிலோ மீற்றர் தூரத்திற்கு முதற்கட்டமாக மிதிவெடியகற்றும் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓமந்ததையிலிருந்து யாழ்பாணம் வரையான 138 கிலோ மீற்றர் புகையிரதப்பாதையில் மிதிவெடி அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதன் அடிப்படையில் மிதிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஒமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பாதையில் 63 கிலோ மீற்றர் தூரம் மிதிவெடி அகற்றப்பட்டுள்ளது.

இம்மிதிவெடி அகற்றும் பணியில் புகையிரதப்பாதை அமைக்கும் இந்தியாவின் நிறுவனத்தோடு இலங்கையின் இராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.