தேசிய ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உரிய இடம் பாராளுமன்றமே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
இதற்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் 64ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் அநுராதபுரத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இவ்வாறு குறிப்பிட்டார்.
