சிங்கப்பூரிலிருந்து 10.1 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வாந்தடைந்த இலங்கை இளைஞர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெமட்டகொடையைச் சேரந்த 21 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 216 தங்கச் சங்கிலிகள், 20 நெக்லஸ்கள், 6 ஜோடி காதணிகள், 13 தங்க பிஸ்கட்டுகள் உட்பட 1.74 கிலோகிராம் எடையுள்ள தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். (தீப அதிகாரி)
