செவ்வாய், 20 மார்ச், 2012

அமெரிக்கா சமர்பிக்கும் இலங்கை தொடர்பான பிரேரணை மீது நாளை வாக்கெடுப்பு!

இலங்கை தொடர்பில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணை நாளை (21) ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி அமெரிக்காவால் நாளை மாலை குறித்த பிரேரணை சமர்பிக்கப்படவுள்ளதாக ஜெனீவாவில் இருந்து கிடைக்கும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் பிரேரணை குறித்து கருத்து வெளியிட தலா மூன்று நிமிடங்கள் ஒதுக்கப்படும்.

அதன் பின்னர் பதிலளிக்கும் சந்தர்ப்பம் இலங்கைக்கு வழங்கப்படும். இலங்கையின் மனிம உரிமை தூதுவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பதிலளித்து உரையாற்றுவார்.

அடுத்து பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.