மாகாண சபைகளுக்கு பிரதிநிதிகளை நியமித்துக் கொள்வது நாட்டு மக்களின் பொறுப்பு என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள வேட்பாளர்களை மாகாண சபைக்கு அனுப்பி வைப்பதும் வீட்டுக்கு அனுப்பி வைப்பதுவும் வாக்காளர்கள் கையில் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பில் இன்று 26ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
தேர்தலில் அமைச்சர், எம்பிக்களின் உறவினர்கள் போட்டியிடுவதாக எதிர்கட்சிகள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் குறித்து வாக்காளர்களே முடிவெடுப்பர் என அவர் தெரிவித்துள்ளார்.