வெள்ளி, 27 ஜூலை, 2012

கொழும்பில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மதுபான போத்தல்கள் கைப்பற்றம்.

கொழும்பில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மதுபான போத்தல்கள் கைப்பற்றம்கொழும்பில் இருந்து அக்கரைப்பற்றுக்கு சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட ஒரு லொறி மதுபான போத்தல்களை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு ஊடாக இப்போத்தல்கள் கடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சர் துசாதரன் தெரிவித்தார்.

தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அம்பாறை மதுவரித்திணைக்கள பரிசோதகர்களான ஜானக டயஸ், உதயகுமார, லயனல் குணதிலக, துடுகல, தம்மிககுமார ஆகியோர் கொண்ட குழுவினரே குறித்த லொறியை கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த லொறியில் இருந்து 8874 மதுப்போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் போத்தல் மாதிரிகள் அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களை கொண்ட லொறி அம்பாறையில் உள்ள மதுவரித்திணைக்களத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் துசாதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் லொறிச்சாரதியும் லொறியில் இருந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றில் நிறுத்துவதற்கான வேலைகள் இடம்பெற்று வருவதாகம் மதுவரித் திணைக்கள அத்தியட்சர் துசாதரன் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் சட்டவிரோத மதுபான விற்பனைகளை தடுக்கும் முகமாக பல்வேறு செயற்றிட்டங்களை மதுவரித்திணைக்களம் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.