சனி, 14 ஜூலை, 2012

பெற்றோர் பிள்ளைகளை கல்வியிலிருந்து இடைநிறுத்துவது, பிள்ளைகளுக்கு மட்டுமன்றி சமூகத்திற்கும் துரோகமே - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்..(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

பெற்றோர் தங்களது பிள்ளைகளை கல்வியிலிருந்து இடைநிறுத்துவதோ அல்லது அவர்களுக்குரிய கல்வி கற்கும் உரிமையினை மறுப்பதோ அவர்கள் அந்த பிள்ளைகளுக்கு மட்டுமன்றி சமூகத்திற்கும் செய்யும் துரோகம் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (14) கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிலுள்ள தர்மபுரம் மேற்கு கிராமத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் என்ரிப் திட்டத்தின் மூலம் 650 000 ரூபா செலவில் அமைக்கப்பட்ட இராசநாயகம் முன்பள்ளி கட்டிடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார சுமைகள் உள்ளிட்ட பல தடைகள் காணப்பட்டாலும் பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர் தங்களை அர்ப்பணம் செய்யவேண்டும். அதன் மூலமே தங்கள் மீது உள்ள எல்லா தடைகளையும், சுமைகளையும் களைந்து ஆரோக்கியமான சமூகமாக மிளிர முடியும், யுத்தத்தால் எல்லாவற்றையும் இழந்த மக்கள்தான் வன்னியில் வாழ்கின்ற மக்கள் இவர்கள் ஏனைய சமூகங்கள் போன்றும,; நவீன உலக போக்கிற்கு ஏற்பவும் பயணிக்கவேண்டும் அதற்கு ஒரேயொரு வழி கல்வியில் நிமிர்ந்து நிற்பதே எனத்தெரிவித்த அவர்,

மேலும் கல்விச் செயற்பாட்டிற்கான வளங்களை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் எம்மாளான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள முடியும் யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் ஏராளமான வளங்கள் இந்த மாவட்டத்தில் கல்விக்காக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் வளங்கள் தேவையாக உள்ளது அதனையும் எம்மால் நிச்சயம் பெறமுடியும் ஆனால் மாணவர்கள் சிறந்த கல்வி அடைவு மட்டங்களை வெளிப்படுத்த வேண்டும.; பெற்றோர் அதற்கு தங்களின் முழுமையான பங்களிப்பினை வழங்கவேண்டும் இதன் மூலமே நாம் ஒரு வளமான எதிர்காலத்தினை நோக்கி செல்லமுடியும் அதன் மூலமே பின்னோக்கியுள்ள எமது பிரதேசமும் மக்களும் அனைத்து வழிகளிலும் அபிவிருத்தியை நோக்கிச் செல்லமுடியும்

மேலும் சிறந்த கல்விற்காக எல்லோரும் உழைக்கவேண்டும.; குறிப்பாக இந்த முன்பள்ளி அமைப்பதற்காக தனது காணியில் ஒரு பகுதியினை வழங்கிய இரவிச்சந்திரன் காவேரி போன்று பலர் முன்வரவேண்டும் அவரின் செயற்பாட்டிற்கு நாம் எமது மனம் நிறைந்த பாராட்டினையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் சூரியபிரகாஸ் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலர் முகுந்தன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் கிருஸ்ணசாமி, மீள் எழுச்சித்திட்டம் துரித மீள் எழுச்சித் திட்டப் பிரதிப்பணிப்பாளர் விஜயகிருஸ்னண், கிளிநொச்சி சந்தை வர்த்தக சங்க தலைவர் இரத்திணமணி, கிராம சேவையாளர் இராஜரட்னம், ஈழ மக்கள் ஜனநாயகட்சியின் பிரதேச அமைப்பாளர் செல்வம் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.