செவ்வாய், 4 செப்டம்பர், 2012

சட்டவிரோத பிரச்சாரத்தில் ஈடுபட்ட வாகனங்கள் 15 பொலிஸார் வசம்

எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் நடவடிக்கைகளின் போது, தேர்தல் சட்டங்களை மீறி பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 15 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களை நீதிமன்றத்தில் எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் பிரச்சாரங்களின் போது, தேர்தல் சட்டங்களை மீறிய 50 பேருக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை (05) நள்ளிரவுடன் நிறைவடைகின்றன.

தேர்தல் நடவடிக்கைகளிற்காக எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 21,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.