கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் பகல் 12.30 வரையில் 45 வீதம் வரை நடைபெற்றுள்ளதாக மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத் தகவல்கள் தெரிவித்தன.
இதில், கல்குடா தொகுதியில் 55 முதல் 60 வீதமான வாக்களிப்பும், மட்டக்களப்பு தொகுதியில் 45 முதல் 50 வீதமும், பட்டிருப்புத் தொகுதியில் 40 தொடக்கம் 45 வீதமும் வாக்களிப்பு வீதம் நடந்துக் கொண்டிருப்பதாக அலுவலகம் தெரிவித்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில், 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்தில் இன்று பகல் ஆகும் போது 30-35 சத வீதமானோர் வாக்களித்திருந்த போதும் பிற்பகளில் வாக்களிப்பதற்கு மக்களின் ஆர்வம் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கேகாலை மாவட்டத்தில் 566 வாக்குச் சாவடிகளிலும் இரத்தினபுரி மாவட்டத்தில் 623 வாக்குச் சாவடிகளிலும் வாக்களிப்பு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.