ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

ஆர்ப்பாட்டத்தில் ஆபாச படம்;ஜெயா, கலைஞருக்காக பாஸ்கரா MMC கொதிப்பு!

தமிழகத்தில் இலங்கை யாத்திரிகர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்து கொழும்பில் தமிழ் வர்த்தகர்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக முதல்வர் செல்வி.

ஜெயலலிதாவின் உருவப்படத்தை ஆபாசமான முறையில் வரைந்து அதனை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திவந்தமையை கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளருமான சி.பாஸ்கரா வன்மையாகக் கண்டித்துள்ளார்.


தமிழகத்தில் எமது இலங்கை உறவுகளுக்கு நடைபெற்றது அநீதி. அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. அதற்காக எமது எதிர்ப்பைத் தெரிவித்தமை சரியானதே. ஆனால் அதற் காக தமிழக தலைவர்களான கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் இவ்வாறு ஆபாச உருவில் தமிழர்களாகிய நாமே சித்தரித்துக் காட்டுவது மாபெரும் தவறு. மன்னிக்க முடியாத குற்றம் எனவும் பாஸ்கரா தெரிவித்தார்.