சட்டவிரோதமான முறையில் படகு மூலமாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட இலங்கையர்கள் 45 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சைனி பபா எனப்படும் படகில் சென்ற இவர்கள் நீர்கொழும்பு கடற்பரப்பிலிருந்து 20 மைல் தொலைவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 35 பேர் தமிழர்கள் எனவும் 9 பேர் சிங்களவர்கள் எனவும் மற்றைய ஒருவர் முஸ்லிம் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது.
இவர்கள் நீர்கொழும்பு, முல்லைத்திவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கல்முனை, ஹட்டன், திருகோணமலை, வென்னப்புவ, ஆகிய பிரதேசங்களைச் சேந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைக்காக கைது செய்யப்பட்டவர்கள் குற்றத்தடுப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.