திங்கள், 10 செப்டம்பர், 2012

புற்றுநோயை குணப்படுத்தும் வைட்டமின் ‘ஏ’: ஆய்வில் தகவல்

உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயைக் கட்டுப்படுத்த பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. இருப்பினும் இந்நோயை முழுமையாக குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுப்பிடிக்கப்படவில்லை.

அந்த அடிப்படையில் தற்போதைய ஆய்வில், வைட்டமின் ‘ஏ’ சத்து புற்றுநோயை குணப்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி ஆய்வு நடத்தி யார்க்சயர் புற்றுநோய் ஆராய்ச்சி மைய பேராசிரியர் நார்மன் மைட்லாண்ட் கூறியதாவது:-

புற்றுநோயை உண்டாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது மாலிங்னட் எனப்படும் செல்களாகும்.
 இதன் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் திறன் வைட்டமின் ‘ஏ’க்கு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த வைட்டமின் ‘ஏ’யை புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். இதை உணவுச் சத்துக்காகவும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அன்றாட உணவில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகமுள்ள மீன், கேரட், கல்லீரல், சிவப்பு மிளகு, காய்கறிகள் போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். அதற்காக, அதிக அளவு வைட்டமின் ‘ஏ’ மாத்திரைகளை சாப்பிடுவது சரியான முறையல்ல.