பம்பலப்பிட்டி கடற்கரைப் பரப்பில் உள்ள கற்பாறைகளுக்கிடையில் இருந்து விமானப்படை அதிகாரி ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
ரத்மலானை விமானப்படைத் தளத்தில் கடமையாற்றி வரும் விமானப்படை வீரர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக விமானப் படை பேச்சாளர் தெரிவித்தார்.
இவர் நேற்று முன்தினம் (02) விமானப் படைத்தளத்தில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அதன் பின்னர் இவர் வரவில்லை எனவும் விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வீரரின் உறவினர்களுக்கு தகவல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குளிப்பதற்காகச் சென்ற வீரர் கடலில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது வேறு காரணங்கள் இருக்கக் கூடுமான என ஆராய்ந்து வருவதாக விமானப்படை ஊடகப் பிரிவு அதிகாரி தெரிவித்தார்.