செவ்வாய், 4 செப்டம்பர், 2012

திருமலையில் மீனவ பல்தொகுதிக் கட்டிடம் பொது மக்கள் பாவனைக்கு

திருகோணமலை மீனவ பல்தொகுதிக் கட்டிடம் இன்று (04) பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கபப்படவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீர் வள அமைச்சு தெரிவித்துள்ளது.

101 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட இந்த பல்தொகுதிக் கட்டிடத்தில் 64 கடைகள் உள்ளன.

மீன்பிடி அமைச்சு மற்றும் தேசிய விவசாய அமைச்சின் நிதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வங்கி, தபால் நிலையம், மீன்பிடி காரயாலயம், கருத்தரங்கு மண்டபம் உற்பட நவீன அமைப்புக்களுக்கு ஏற்றாட் போல் இவ் பல்தொகுதிக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீர் வள அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.