பமுனுகம - மெதே - நுகபே பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் நிர்க்கதியான ஒரு சிறுவனும் சிறுமியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுவனுக்கு ஆறு வயது என்பதோடு சிறுமியின் வயது 2 ஆகும்.
குறித்தபொலிஸார் சிறுவர்களை மீட்ட அவர்களை வத்தளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
நீதவானின் உத்தரவுபடி சிறுமி பாணந்துறை பிரஜாபதி சிறுவர் இல்லத்திலும் சிறுவன் கட்டுநாயக்க லக்ஷி சிறுவர் இல்லத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடைய பெற்றோர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இச்சிறுவர்களின் தாய் தந்தைக்கு இடையில் பிரச்சினை காணப்பட்டு வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.