இலங்கை சுற்றுலாப் பயணிகள் விடயத்தில் அரசியல் கலப்புக் கூடாது என இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு மற்றும் சென்னை சுங்க இல்ல முகவர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் தென்மண்டல கடல் வாணிகச் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட போதே அமைச்சர் ஜி.கே.வாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை சுற்றுலாப் பயணிகள் விடயத்தில் அரசியல் கலப்பு கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன், காங்கிரஸ் எம்.பி.கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனியைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
நானும் விரைவில் அவருடன் பேசவிருக்கிறேன். அதே நேரம் தமிழகத்துக்கு வரும் இலங்கை சுற்றுலாப் பயணிகள் விஷயத்தில் அரசியல் கூடாது. நமது அரசியல் உணர்வு இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வுக்கு உதவிக்கரமாக இருக்க வேண்டும். நமது அரசியல் உணர்வுகள் எந்த விதத்திலும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.