திங்கள், 3 செப்டம்பர், 2012

ஆப்கான் படைகளுக்கு பயிற்சி அளிப்பதை நிறுத்தியது அமெரிக்கா

ஆப்கான் படையில் உள்ள கலகக்காரர்கள் குறித்து மீள் விசாரணை செய்யப்படும்வரை அந்நாட்டு படைகளுக்கு பயிற்சி அளிப்பதை அமெரிக்க இராணுவம் நிறுத்திக்கொண்டுள்ளது. ஆப்கானில் இருக்கும் அமெரிக்க விசேட படையின் தளபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதனால் வெளிநாட்டு படைகளிடம் பயிற்சி பெற்றுவரும் 27,000 ஆப்கான் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த செய்தியை வெளியிட்டுள்ள வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ஆப்கான் இராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்களில் இந்த ஆண்டில் 45 வெளி நாட்டு படை வீரர்கள் கொல்ப்பட்டுள்ளனர்.

இதனையடுத்தே அமெரிக்க இராணுவம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஆப்கானில் அந்நாட்டுடன் இணைந்து சுமார் 130,000 அளவான நேட்டோ படை ஒரு தசாப்த காலமாக தலிபான் அமைப்புடன் போராடிவருகிறது. 2014 ஆம் ஆண்டுடன் நேட்டோ படைகள் அங்கிருந்து முழுமையாக வாபஸ் பெறப்படவுள்ளது.