ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் லண்டன் கிளை வடமராட்சி கற்கோவளம் உதய தாரகை விளையாட்டுக் கழகத்தின் மேம்பாட்டிற்கென ஒருதொகை நிதியினை வழங்கியுள்ளது.
வடமராட்சிக்கு இன்றைய தினம் (02) விஜயம் மேற் கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா இந்நிதியினை விளையாட்டுக் கழகத்திடம் கையளித்தார்.
அத்துடன் எதிர்காலங்களில் குறித்த விளையாட்டுக் கழகத்தின் மேம்பாட்டிற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய ஏனைய செயற்றிட்டங்களுக்கு தமது முழுமையான பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இதனிடையே இவ்விளையாட்டுக் கழக மைதானத்தைச் சூழவும் கட்சியின் நிதிப் பங்களிப்புடன் கம்பிவலை மூலம் வேலி அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கட்சியின் லண்டன் கிளை வழங்கியிருந்த நிதியுதவிக்கும் இதனைப் பெற்றுத் தந்த கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் விளையாட்டுக் கழக நிர்வாகிகள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

