சனி, 9 ஏப்ரல், 2016

கியூப முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ கடந்த 9 மாதங்­களில் பின் பொது இடத்தில் தோன்றிய.(காணொளி)

கியூப முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ கடந்த 9 மாதங்­களில் பின் முதல் தட­வை­யாக வியா­ழக்­கி­ழமை பொது இடத்தில் தோன்­றி­யுள்ளார்.
 
அவர் சிறு­வர்­க­ளுடன் உரை­யா­டு­வ­தையும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா குறித்து கண்­டனம் தெரி­விப்­ப­தையும் வெளிப்­ப­டுத்தும் காட்­சிகள் அந்­நாட்டு அர­சாங்க தொலைக்­காட்­சியில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. இதன்­போது அவர் கியூ­பாவின் பொது கல்வி முறைமை குறித்து விப­ரித்தார்.
 
 
 
 
பிடெல் காஸ்ட்ரோ (89 வயது) இதற்கு 9 மாதங்­க­ளுக்கு முன்னர் ஆயுதப் படை­யினர் மற்றும் உள்­துறை அமைச்­சுடன் இணைந்து பணி­யாற்­றிய பொது­மக்­க­ளுடன் தோன்றும் காட்­சியை அந்த நாட்டு தொலைக்­காட்சி ஒளிப­ரப்­பி­யி­ருந்­தது.
 
1959 ஆம் ஆண்­டி­லி­ருந்து அதி­கா­ரத்­தி­லி­ருந்து வந்த பிடெல் காஸ்ட்ரோ 2006 ஆம் ஆண்டில் உடல் நலக்குறைவு கார­ண­மாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவுக்கு அதிகாரத்தைக் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.