சனி, 18 ஆகஸ்ட், 2018

மண் சரிவு அபாயத்தால் 18 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் வௌியேற்றம்

மஸ்கெலியா, பிரவுன்வீக் தோட்டம், கெஸ்கீபன் பிரிவில், மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆலமரமொன்று, முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், மேற்படி குடியிருப்பில் வசித்தும் வரும் 18 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர், வெளியேற்றப்பட்டுள்னர். 
 
இவர்கள், தோட்டத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில், தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்களுக்கான உலருணவுப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு, அம்பகமுவ பிரதேச செயலகம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

மேலும், இப்பகுதியில் மற்றுமொரு மரமொன்று முறிந்து, மாட்டுத் தொழுவமொன்றில் விழுந்துள்ளதாகவும் எனினும் மாட்டுத் தொழுவத்திலிருந்த பசுக்கள், தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளன என்றும், பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.